உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரூ.20 லட்சம் ரிட்டன் ஏன்? கரூர் பெண் பரபரப்பு பேட்டி |Karur Woman Returned Rs. 20 lakhs | Vijay

ரூ.20 லட்சம் ரிட்டன் ஏன்? கரூர் பெண் பரபரப்பு பேட்டி |Karur Woman Returned Rs. 20 lakhs | Vijay

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது. சம்பவம் நடந்த உடனே விஜய் சென்னை திரும்பினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலாக 20 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்தார். ஆனால்கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என அரசியல் கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்தன. அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடியோ காலில் ஆறுதல் கூறிய விஜய், விஜய் அறிவித்தபடி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் அவரவர் வங்கிக்கணக்குக்கு அனுப்பப்பட்டது. விஜய் கரூர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாதம் ஆகியும் பாதுகாப்பு காரணங்களால் அவரால் செல்ல முடியவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 110 பேரை மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறினார்.

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை