உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உயிருக்கு போராடிய மாணவி; கரூரை நடுங்க வைத்த சம்பவம் | karur | Dinamalar

உயிருக்கு போராடிய மாணவி; கரூரை நடுங்க வைத்த சம்பவம் | karur | Dinamalar

கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவனும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கம். நேற்று இரவு மாணவியுடன் போனில் பேசிய அந்த மாணவன், அருகே உள்ள சோள காட்டுக்கு வருமாறு அழைத்துள்ளான். இந்த நேரத்தில் வரமுடியாது என மாணவி மறுத்து இருக்கிறாள். உடனே அந்த மாணவன், உனக்காக பரிசு வாங்கி வந்து இருக்கிறேன். வந்து வாங்கிக்கொள் என ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளான். அதை நம்பிய மாணவி, அவன் சொன்ன இடத்துக்கு தனியாக சென்றாள். அப்போது அந்த மாணவனும், அவனுடன் இருந்த 2 நண்பர்களும் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

பிப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை