கரூர் சம்பவம்... பவரை கையில் எடுக்கும் அஸ்ரா கார்க் karur stampede | ashra garg | sit on vijay issue
#KarurStampede #SITOnKarurIssue #AshraGarg #DMKvsTVK #TVKIssue #KarurTragedy #PoliticsInKarur #TamilNaduNews #CurrentAffairs #StampedeAwareness #SocialIssues #PoliticalDebate #PublicSafety #CommunityResponse #KarurUpdates #DMKStance #TVKDiscussion #CivicEngagement #ResponsibleReporting கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையை எஸ்ஐடி என்னும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றி நேற்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. எஸ்ஐடியின் தலைவராக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கை நியமித்தது. அவரது டீம் விசாரணையை துவங்குவதற்கு ஏதுவாக வழக்கு ஆவணங்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கும் ஏற்பாடு துவங்கி இருக்கிறது. இதற்காக வழக்கின் கோப்புகள், கைப்பற்றிய முக்கிய ஆவணங்களை கரூர் போலீசார் சென்னை கொண்டு செல்கின்றனர். சம்பவம் தொடர்பாக 110 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று இருக்கின்றனர். அது தொடர்பான ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.