காசி-தமிழ் சங்கமம் ரயிலை தொடங்கி வைத்தார் கவர்னர்
தமிழகம் காசி இடையேயான கலாச்சார தொடர்பை புதுப்பிக்கும் வகையில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 3வது ஆண்டாக நடைபெறுகிறது. வரும் 15ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாசார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது. தமிழகத்திலிருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 1,080 பேர் பங்கேற்க உள்ளனர். இதற்காக, சென்னை, கன்னியாகுமரியில் இருந்து தலா 2 ரயில் கோவையில் இருந்து ஒரு ரயில் என 5 ரயில்கள் வாரணாசிக்கு இயக்கப்படுகின்றன. இன்று சென்னையில் இருந்து 212 பேருடன் வாரணாசிக்கு புறப்பட்ட முதல் சிறப்பு ரயிலை கவர்னர் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிப் 13, 2025