உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளி, கல்லூரிகளில் முழுநேர தமிழ் வகுப்பு நடத்த உபி அரசு திட்டம்! Kashi Tamil Sangamam | Tamil Class

பள்ளி, கல்லூரிகளில் முழுநேர தமிழ் வகுப்பு நடத்த உபி அரசு திட்டம்! Kashi Tamil Sangamam | Tamil Class

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. அங்கு நான்காவது முறையாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள், வல்லுனர்கள், தமிழ் மொழி ஆய்வாளர்கள், மாணவர்கள் இதில் பங்கேற்றனர். கதை, கவிதை மற்றும் கட்டுரை வாசிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, உத்தரபிரதேசத்தில் உள்ள முக்கிய பள்ளி மற்றும் கல்லூரிகளில், மாலை நேரங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டன. இதற்காக, ஹிந்தி தெரிந்த தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்து உத்தர பிரதேசம் அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்தாண்டு இறுதியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உத்தர பிரதேச குவீன்ஸ் அரசு கல்லூரி மாணவி பாயல் படேல், குறுகிய காலத்தில் தமிழ் மொழியை சிறப்பாக கற்றுக் கொண்டார் என, பாராட்டினார். இதன் தொடர்ச்சியாக அரசு பள்ளிகள், கல்லூரிகளில் முழு நேர தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. #KashiTamilSangamam #TamilClassinUP #PMModi #YogiAdityanath #TamilCulture #LanguageLearning #CulturalExchange #EmpoweringTamilArtists #UttarPradesh #UnityInDiversity #TamilHeritage #IndianLanguages #CulturalFestival #EducationMatters #PromotingTamil #GovernmentInitiatives #LanguagePreservation #HeritageCelebration #UpskillingTamilNatives #EmbraceDiversity

ஜன 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை