கோயில் ஊழலை அமைச்சர் விசாரிக்கணும்: கிருஷ்ணசாமி
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தபெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில், கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகளில் தரமில்லை என இந்து அமைப்புகள், சிவனடியர்கள் புகார் கூறி வருகின்றனர். கோயில் புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இதில் மிகப்பெரிய ஊழல் நடப்பதாக கூறினார்.
பிப் 23, 2025