உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாசல் முன் தீ | Temple | Fire | Kashi Vishwanathar temple

காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாசல் முன் தீ | Temple | Fire | Kashi Vishwanathar temple

தென்காசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கு திருப்பணி வேலைகள் நடக்கிறது. ஜனவரி 7ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இன்று காலை வழக்கம் போல பக்தர்கள் தரிசனத்துக்கு வந்திருந்தனர். சாமி கும்பிடுவது போல வந்த ஒருவர் பையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து கோயில் கோபுர வாசல் முன் ஊற்றி தீ வைத்தார். மண்ணெண்ணெயுடன் பெட்ரோல் கலக்கப்பட்டு இருந்ததால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை