காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு-பதற்றம் | kashmir | rajouri army vehicle attack
காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு-பதற்றம் | kashmir | rajouri army vehicle attack காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் சுந்தர்பானி செக்டாரில் பால் என்ற கிராமம் உள்ளது. அந்த பகுதியில் இன்று ராணுவ வாகனத்தில் நம் வீரர்கள் வழக்கம் போல் ரோந்து சென்றனர். திடீரென புதருக்குள் மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனம் மீது சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். பலமுறை சரமாரியாக சுட்டனர். பதிலுக்கு துப்பாக்கி குண்டு வந்த திசையை நோக்கி நம் வீரர்களும் தாக்குதல் நடத்தினர். தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடர்ந்த காட்டுக்குள் பயங்கரவாதிகள் தப்பி ஓடினர். நல்லவேளையாக இந்த தாக்குதலில் நம் வீரர்களுக்கு எதுவும் ஆகவில்லை. பயங்கரவாதிகளை சுற்றிவளைக்க கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். பயங்கரவாதிகள் தப்பி ஓடிய பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை. பயங்கரவாதிகளை வேட்டையாடும் வரை விடமாட்டோம். தீவிரமாக தேடி வருகிறோம் என்று நம் ராணுவ அதிகாரிகள் கூறினர்.