ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் பரூக் கதை முடித்த ராணுவம் | Kashmir encounter | Farooq Ahmed Bhat | Hiz
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் இருந்து, அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. ஆட்டம் காட்டும் பயங்கரவாதிகளுக்கு அவ்வப்போது பதிலடி கொடுக்கப்படுகிறது. குல்காம் மாவட்டம் பெஹிபாக் ஏரியாவில் உள்ள காடர் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. காஷ்மீர் போலீசாருடன் காடர் பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகளுக்கு நம் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். கடைசியில் 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் அதே இடத்தில் சுட்டு பொசுக்கினர். 2 ராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர். என்கவுன்டரில் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் ஃபரூக் அகமது பட், இர்பான் லோன்(Irfan Lone), ஆதில் உசேன்(Adil Hussain), முஸ்தக் இடூ(Mushtaq Itoo), யாசிர் ஜாவத்(Yasir Javaid) என்பது தெரிந்தது. இதில் ஃபரூக் அகமது பட், ஜம்மு காஷ்மீரில் மிக நீண்ட காலம் ஆட்டம் காட்டிய ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க தளபதி என்பது தெரிய வந்துள்ளது. 2015ல் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் சேர்ந்த பரூக், காஷ்மீர் மக்களை தீவிரவாதிகளாக மாற்றி தங்கள் அமைப்பில் சேர வைத்தார். தெற்கு காஷ்மீரின் பயங்கரவாத நெட்வொர்க்கில் தீவிரமாக செயல்பட்டு தளபதியாக உயர்ந்தார்.