உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இத செய்யுற வரைக்கும் சிந்து தண்ணீர் வராது:ஜெய்சங்கர் EAM Dr S Jaishankar| operation sindoor| kashm

இத செய்யுற வரைக்கும் சிந்து தண்ணீர் வராது:ஜெய்சங்கர் EAM Dr S Jaishankar| operation sindoor| kashm

மத்திய அமெரிக்காவில் உள்ள ஹண்டுராஸ் Hounduras நாட்டின் தூதரகம் டெல்லியில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். பின் அவர் பேட்டி அளித்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின்போது இந்தியா பக்கம் நின்ற நாடுகளில் ஹண்டுராசும் ஒன்று. குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதுதான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம். அதற்கேற்பதான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இருந்தது. இதற்கு நிறைய சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தது. பாகிஸ்தானுடனான பேச்சவார்த்தை என்பது கண்டிப்பாக இருதரப்பு ரீதியாக மட்டுமே இருக்கும். பல ஆண்டுகளாக உள்ள வழக்கில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதத்தை பற்றியதாக மட்டுமே இருக்கும் என பிரதமர் மோடி தெளிவாக சொல்லியிருக்கிறார். ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் இருக்கிறது. அத்துடன் அவர்கள் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புகளை மூட வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். பயங்கரவாதத்துக்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களுடன் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்க வேண்டும் என்று நிர்ணயித்த இலக்குகளை நாங்கள் அடைந்துவிட்டோம். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியபோதே பாகிஸ்தானுக்கு ஒரு செய்தி அனுப்பினோம். பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே தாக்குகிறோம். ராணுவத்தை அல்ல; ராணுவம் இதில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம். ஆனால், அந்த ஆலோசனையை அவர்கள் கேட்கவில்லை. கடந்த 10ம் தேதி அவர்கள் மோசமாக தாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட சேதம், அவர்களால் நமக்கு ஆன லேசான சேதம் பற்றி சாட்டிலைட் படங்கள் காட்டின. இதிலிருந்தே யார் சண்டையை நிறுத்த விரும்பினார்கள் என்பது தெளிவாக தெரியும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக நம்பகமான மற்றும் மாற்ற முடியாத வகையிலான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். அதுவரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுதான் இருக்கும். காஷ்மீர் பற்றி விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உண்டு என்றால் அது, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை அவர்கள் எப்போது காலி செய்வார்கள் என்பது பற்றிதான் இருக்கும். அது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.

மே 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை