உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 பயங்கரவாதிகள் சிறைபிடிப்பு! தேடுதல் வேட்டை தீவிரம் | Kashmir| Operation Akhal| Indian Army

2 பயங்கரவாதிகள் சிறைபிடிப்பு! தேடுதல் வேட்டை தீவிரம் | Kashmir| Operation Akhal| Indian Army

காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ராணுவம் இறங்கி உள்ளது. இந்த சூழலில் அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீரில் உள்ள அகல் என்ற வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக சென்ற 1ம் தேதி தகவல் கிடைத்தது. உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ராணுவம் அதிரடியாக ஆப்பரேசன் அகலை தொடங்கியது. நம் வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். போலீசாருடன் இணைந்து பயங்கரவாதிகளை தேடினர். ட்ரோன்கள், ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் வேட்டை நடந்தது. சிக்கிய சிலரிடம் நடத்திய விசாரணையில் குல்காம் மலைப்பகுதியிலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு இருதரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில் பிரித்பால் சிங், ஹர்மிந்தர் சிங் என்ற 2 வீரர்கள் இறந்தனர். பதினோரு பாதுகாப்பு வீரர்கள் இதுவரை காயமடைந்துள்ளனர். 10 நாளாக ஞாயிறன்று காலை கிஷ்த்வாரில் உள்ள துல் பகுதியில் நடந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். அவனது விவரம் இன்னும் வெளியாகவில்லை. அப்பகுதியில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக பிடித்துள்ளனர். தொடர்ந்து மோதல் நடந்து வருவதாக ராணுவம் கூறி உள்ளது,

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை