உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்து என்ன? POK பிரதமர் திடீர் உத்தரவால் பதற்றம் kashmir pahalgam attack | POK inida vs pakistan

அடுத்து என்ன? POK பிரதமர் திடீர் உத்தரவால் பதற்றம் kashmir pahalgam attack | POK inida vs pakistan

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த கணமும் பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் உச்சக்கட்ட பீதியில் உள்ளது. பதிலடியை சமாளிக்க எல்லையை உஷார் நிலையில் வைத்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அடுத்த 60 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமர் சவுத்ரி அன்வாருல் ஹக் வெளியிட்ட அறிவிப்பு: எல்லையை ஒட்டி வசிக்கும் மக்கள் அடுத்த 2 மாதத்துக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். நீலம் பள்ளத்தாக்கு மற்றும் எல்லையை ஒட்டியுள்ள மற்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. ராணுவ மோதல் ஏற்பட்டால் நிலைமையை சமாளிக்க வேண்டும் என்பதால், அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்து பொருட்களை இருப்பு வைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்தார். அதே போல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுதும் உள்ள மதரசாக்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்களையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தான் பயங்கரவாதிகளை வளர்க்கும் முக்கிய இடமாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. அங்கு மட்டும் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம், பதுங்குமிடங்கள் என 40 முகாம்கள் இருப்பதை நம் உளவுத்துறை மோப்பம் பிடித்தது. அந்த இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் கருதியதால், 40 முகாம்களில் இருந்த பயங்கரவாதிகளையும் பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது. அதே போல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற வேண்டும் என்ற குரல் இந்திய அரசியல் களத்தில் வலுவாக ஒலிக்க ஆரம்பித்ததாலும் இத்தகைய நடவடிக்கையை பாகிஸ்தானும், அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசும் எடுத்துள்ளன.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை