உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாட்டை உலுக்கிய காஷ்மீர் அட்டாக் பற்றி பகீர் | kashmir pahalgam attack | shocking j&k pahalgam issue

நாட்டை உலுக்கிய காஷ்மீர் அட்டாக் பற்றி பகீர் | kashmir pahalgam attack | shocking j&k pahalgam issue

காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. டூரிஸ்ட் ஸ்பாட்டை சுற்றுலா பயணிகள் ரசித்து பார்த்துக்கொண்டிருந்த போது, அவர்களை குறி வைத்து பயங்கரவாத கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. கூட்டத்தை நோக்கி குருவி சுடுவது போல் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தாய்பா அமைப்பின் கிளை பிரிவான டிஆர்எப் எனப்படும் The Resistance Front அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை வேட்டையாட பிரதமர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் உத்தரவிட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அமித்ஷாவும் பஹல்காம் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்கள் அதிர்ச்சிகரமான பல விஷயங்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக உயிர் தப்பிய பெண் ஒருவர், தனது கணவனை பயங்கரவாதிகள் தாக்கியது பற்றி பதற்றத்துடன் கூறினார். ‛நானும் எனது கணவரும் பேல்பூரி சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அப்போது தான் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. பயங்கரவாதிகள் கூட்டத்தில் இருந்த ஒருத்தன் எனது கணவரை குறி வைத்து சுட்டான். ‛நீ முஸ்லிம் இல்லை என்று சொன்னபடி எனது கணவனை சுட்டான் என்று பதைபதைப்புடன் கூறினார். ஸ்பாட்டில் இருந்து வெளியான ஒரு வீடியோவில், என் கணவரை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று இன்னொரு பெண் கதறும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. உள்ளூரை சேர்ந்த ஓமர் என்பவர் இப்படியொரு கொடிய சம்பவம் நடந்திருக்க கூடாது என்று வேதனை தெரிவித்தார். ‛நாங்கள் மீளா துயரில் இருக்கிறோம். நிறைய இழப்பு நேர்ந்து இருக்கிறது. தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்துக்காக வருந்துகிறோம். எங்கள் விருந்தினர்களுக்கு இப்படி நடந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றார். சம்பவம் நடந்த இடம் பஹல்காமின் பைசரன் Baisaran என்ற பள்ளத்தாக்கு. இங்கு செல்ல வேண்டும் என்றால் 5 கிலோ மீட்டர் நடந்தே போக வேண்டும். அல்லத குதிரையில் தான் சவாரி செய்ய வேண்டும். இருப்பினும் இது சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடங்களுள் ஒன்று. எளிதில் வாகனங்கள் வர முடியாது என்பதால் திட்டமிட்டு இந்த இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர் என்று உள்ளூர் போலீசார் கூறினர்.

ஏப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !