உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாக்குதலுக்கு காரணமானவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் Kashmir Terror attack| Pahalgam attack|

தாக்குதலுக்கு காரணமானவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் Kashmir Terror attack| Pahalgam attack|

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் 22ம் தேதி பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்து பாதியில் நாடு திரும்பினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உடனே ஸ்ரீநகர் சென்றார். தாக்குதல் நடந்த பஹல்காமில் நேரில் ஆய்வு செய்தார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பாகிஸ்தானுடனான உறவை முற்றிலும் முறித்துக் கொள்வதாக அரசு முடிவெடுத்தது.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ