10 கேள்விகளை எதிர்கொள்வரா எம்பி ராகுல்? | MP Rahul | Congress | Sonia | BJP
பாஜ வெளியிட்டுள்ள அறிக்கை; எப்.டி.எல்., - ஏ.பி., என்ற ஆசிய பசிபிக் ஜனநாயக தலைவர்கள் மன்றத்தின் துணை தலைவராக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளார். இந்த அமைப்புக்கு அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசின் தொண்டு நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது. எப்டிஎல் - ஏபி அமைப்பு காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என விரும்புகிறது. இந்த அமைப்புடன் சோனியா தொடர்பு வைத்திருப்பது, இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் செல்வாக்கை வெளிப்படுத்துகிறது. சோனியா தலைமையில் செயல்படும் முன்னாள் பிரதமர் ராஜிவின் தொண்டு நிறுவனம், ஜார்ஜ் சோரஸ் நிறுவனத்துடன் கூட்டு வைத்து உள்ளது. சோரஸ் நிதியுதவி அளிக்கும் ஓபன் சொசைட்டி தொண்டு நிறுவனத்தின் துணை தலைவரான சலீல் ஷெட்டி, ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றுள்ளார். தொழிலதிபர் அதானி குறித்த ராகுலின் நேரடி போட்டியை ஜார்ஜ் சோரஸ் நிதி அளிக்கும் அமெரிக்காவை சேர்ந்த ஓசிசிஆர்பி எனப்படும் புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்பு நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதானி மற்றும் பிரதமரை விமர்சனம் செய்ய இந்த அமைப்பை ராகுல் ஓர் கருவியாக பயன்படுத்துகிறார். இது நம் நாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தை காட்டுகிறது. காங்கிரஸ் எம்பி சசி தரூரோ, ஜார்ஜ் சோரஸ் தன் பழைய நண்பர் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இது கவனிக்கத்தக்க ஒன்று என பாஜவின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.