உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஷ்மீரில் ராணுவ வீரரை கடத்தி பயங்கரவாதிகள் செய்த கொடூரம் kashmir jawan kidnap | kashmir tigers

காஷ்மீரில் ராணுவ வீரரை கடத்தி பயங்கரவாதிகள் செய்த கொடூரம் kashmir jawan kidnap | kashmir tigers

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த இடத்தை நேற்று காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை தீவிரமாக தேடி வந்தனர். தேடுதல் வேட்டையில் 2 ராணுவ வீரர்கள் மாயமானார்கள். அவர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றது தெரியவந்தது. கூடுதல் வீரர்கள் ஸ்பாட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். வனப்பகுதி முழுதும் விடிய விடிய தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. மாயமான 2 வீரர்களில் ஒருவர் தப்பி வந்து விட்டார். அவரது உடலில் 2 இடங்களில் துப்பாக்கி குண்டு காயம் இருந்தது. அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து நடந்த தேடுதல் பணியில் பத்ரிபால் வனப்பகுதியில் இன்னொரு வீரர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது பெயர் ஹிலால் அகமத பட். அவரை பயங்கரவாதிகள் உயிருடன் பிடித்து துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்திருந்தனர். காஷ்மீர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததோடு நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக அனந்த்நாக் மாவட்டத்தில் தொடர் பயங்கரவாத தாக்குதல் நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 வீரர்களை பயங்கரவாதிகள் கொலை செய்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதற்கு முன்பு தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் என்கவுன்டர் செய்தனர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்களும், ஒரு போலீஸ் அதிகாரியும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான காஷ்மீர் புலிகள் அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை