இந்திய ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு | Kavach installation | Indian Railways | Kavach
அனைத்து ரயில்களிலும் வரபோகிறது கவச் கருவி! இந்திய ரயில்வேயின் அறிக்கை: பாதுகாப்பான வேகம், ஆபத்தான சிக்னல்களை மீறுவதை கண்காணித்து தானாக பிரேக் பிடித்து, ரயிலை நிறுத்த உதவும் கவச் எனும் தானியங்கி அமைப்பை ரயில்வே நிர்வாகம் நிறுவி வருகிறது. இந்த அமைப்பை அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பொருத்தி வெற்றி பெற்றுள்ளன. இந்தியாவில் மும்பை புறநகர் ரயில்களில் 1986ல் பொருத்தி சோதிக்கப்பட்டது. 2006ல் வடகிழக்கு ரயில்வேயில் சோதிக்கப்பட்டது. 2010 முதல் 2016 வரை ஆக்ராவிலிருந்து சென்னை வரும் ரயில்கள் மற்றும் கோல்கட்டா மெட்ரோ உள்ளிட்டவற்றில் சோதிக்கப்பட்டது. இவற்றில் உள்ள நிறை, குறைகள் குறித்து தொடர் ஆய்வறிக்கைகள் பெற்று அதன் அடிப்படையில் 2020ல் கவச் தொழில்நுட்பம் ஏற்கப்பட்டது. இப்போது மத்திய ரயில்வேயில் 1,465 கி.மீ துாரத்துக்கு இயக்கப்படும் 144 ரயில் இன்ஜின்களில் கவச் பொருத்தப்பட்டுள்ளது.