உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண்ணை ஆற்றில் கழிவுநீர் தமிழக அரசு விழிக்குமா?

பெண்ணை ஆற்றில் கழிவுநீர் தமிழக அரசு விழிக்குமா?

கர்நாடகாவில் பெய்யும் மழையால் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. 2 தினங்களுக்கு முன்பு அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நீரில் கலந்து வந்த ரசாயன கழிவுளால் நுரை பொங்கி ஓடியது. அங்குள்ள தரைப்பாலம் ரசாயன நுரையால் மூடியது. பெங்களூருவில் உள்ள ஆலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் ஆற்றில் கலந்துவிடப்படுவதால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஒசூர் விவசாயிகள் கூறுகின்றனர். இதை கண்டித்து தமிழக விசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கெலவரப்பள்ளி அணை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை