உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்வி துறையை கட்டுப்படுத்தும் முஸ்லிம் அமைப்புகள் | Kerala | Muslim Trust | School Education

கல்வி துறையை கட்டுப்படுத்தும் முஸ்லிம் அமைப்புகள் | Kerala | Muslim Trust | School Education

கேரளாவில் முதல்வர் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. தற்போது பள்ளி கல்வியில் மாற்றம் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டது. நடப்பு கல்வி ஆண்டில் மாதத்தில் 16 நாட்களுக்கு வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் பள்ளி நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டித்து உத்தரவிடப்பட்டது. காலை மற்றும் மதியம் தலா 15 நிமிடங்கள் கூடுதலாக பாடவேளைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதனால் ஒரு வருடத்தில் 220 கற்பித்தல் நாட்களுக்கு தேவையான நேரத்தை பெற முடியும் என மாநில கல்வித் துறை கூறியது. இதற்கு, கேரள முஸ்லிம்கள் ஆதரவு பெற்ற, இய்யத்துல் உலமா என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, கேரள கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டி விளக்கம் அளித்தார். கோர்ட் உத்தரவுப்படியே பள்ளி வேலை நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. இதை எதிர்ப்பவர்கள், நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். தேர்வுகள் அல்லது பள்ளி நேரங்களை சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒதுக்கி வைக்க முடியாது. கடந்த காலங்களிலும், இதுபோல பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அனைத்தையும் நாம் ஏற்றுக்கொண்டால், பள்ளிகளை நடத்துவது கடினமாகி விடும். கல்வித் துறையில் மத அமைப்புகள் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. அதை எந்த காரணத்திற்காகவும் ஏற்க முடியாது என அவர் கூறினார். ஏற்கனவே கேரள பள்ளிகளில், மாணவ - மாணவியரின் மன அழுத்தத்தை போக்கவும், உடல் நலத்தை பேணவும், ஜூம்பா எனப்படும் நடனம் பயிற்சியை மாநில கல்வி துறை துவங்கியது.

ஜூலை 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !