உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட ஓட்டல் ஊழியர் | Kerala | Punalur

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட ஓட்டல் ஊழியர் | Kerala | Punalur

கேரளாவின் பாலக்காடு-தூத்துக்குடி இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இன்று அதிகாலை தமிழகம்-கேரளா எல்லையில் உள்ள புனலூர் ஸ்டேஷன் அருகே வந்தது. அப்போது ஓடும் ரயிலில் இருந்து ஒருவர் கீழே தள்ளிவிடப்பட்டதாக தகவல் பரவியது. பயணிகள் சிலர் இது குறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த ரயில்வே போலீசார் புனலூரில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டனர். சம்பவத்தை தொடர்ந்து பாலருவி எக்ஸ்பிரஸ் புனலூர் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. ரயில் பயணிகளிடம் இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மே 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை