உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அங்கமாலி - எருமேலி இடையே ரயில் பாதை அமைக்க ரயில் அமைச்சகம் திட்டம்: கேரள அரசு சம்மதம் Kerala Govern

அங்கமாலி - எருமேலி இடையே ரயில் பாதை அமைக்க ரயில் அமைச்சகம் திட்டம்: கேரள அரசு சம்மதம் Kerala Govern

ேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, அங்கமாலி - எருமேலி இடையே 110 கிமீ துார சபரிமலை ரயில் பாதை அமைக்கும் திட்டம் 20 ஆண்டுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அங்கமாலியில் இருந்து, பெரும்பாவூர், மூவாட்டுப்புழா, தொடுபுழா உள்ளிட்ட நகரங்களுக்கு இத்திட்டம் எளிதான இணைப்பை தரும். இத்திட்டத்திற்காக, வெறும் 8 கிமீ நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்ட நிலையில், மேற்கொண்டு பணி தொடராமல் கிடப்பில் போடப்பட்டது. பல்வேறு காரணங்களால் இத்திட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலையில், தற்போது இதற்கான திட்ட மதிப்பீடு, 3,800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இத்திட்டத்திற்கான செலவின் 50 சதவீதம் மாநில அரசும், மீதமுள்ள 50 சதவீதத்தை ரயில்வே அமைச்சகமும் செலவழிக்கும். நிலம் கையகப்படுத்தும் பணியை, மாநில அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் கூறினார். SabarimalaRailwaytrack| RailwayMinistry| Southernrailway| kerala| Iyappa|

பிப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ