உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நர்ஸ் மரண பிடியில் சிக்கியது எப்படி? பகீர் பின்னணி | Nimisha Priya | Kerala nurse Yemen

நர்ஸ் மரண பிடியில் சிக்கியது எப்படி? பகீர் பின்னணி | Nimisha Priya | Kerala nurse Yemen

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா. கடந்த 2017ல் ஏமன் நாட்டில் ஹேம் நர்ஸ்சாக பணியாற்றி வந்தார். அவர் வேலை செய்த வீட்டில் தலால் அப்தோ என்பவர் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்ததாக கூறப்படுகிறது. பாஸ்போர்ட்டை திரும்ப தர சொல்லி நிமிஷா கேட்டுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை. எப்படியாவது பாஸ்போர்ட் வாங்கிவிட வேண்டும் என தலால் அப்தோவுக்கு நிமிஷா ஊசி மூலம் மயக்க மருந்தை செலுத்தியுள்ளார். இதில் அவர் இறந்தார். இதனையடுத்து நிமிஷா பிரியாவை ஏமன் போலீஸார் கைது செய்தனர். அப்போதிலிருந்து அவர் சிறையில் உள்ளார். குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அவரது மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியானது. அவரை காப்பாற்ற தாயார் பிரேமா குமாரி ஏமனுக்கு சென்றார். ஏமன் நாட்டு சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக போனால் தண்டனை ரத்தாகும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டு, அவர்கள் கேட்கும் பணம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். அவர்கள் மன்னித்தால் கொலை குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும். பிளட் மணி(Blood Money) எனும் இந்த வழக்கம் ஏமனில் நடைமுறையில் உள்ளது. இதனை பயன்படுத்தி நர்ஸ் நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி எடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட தலால் அப்தோ குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அப்துல்லா அமீர் என்ற வக்கீல் நியமிக்கப்பட்டார். ஜூலை 4ம் தேதி அவருக்கு 19 ஆயிரத்து 871அமெரிக்க டாலர் பணம் வெளியுறவு அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டது. இந்திய மதிப்பில் இது 16 லட்சத்துக்கும் மேல் வரும். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்ட வக்கீல் மேலும் 20 ஆயிரம் டாலர் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். கூடுதல் பணம் வாங்காமல் பேச்சுவார்த்தைக்கு போக மாட்டேன் என அடம் பிடித்தார்.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி