இரவில் இருந்த கோயில் பகலில் மாயம்! | Kerugambakkam | Temple demolished
சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடக்கிறது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. கொளப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள கற்பக விநாயகர் கோயிலும் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நெடுஞ்சாலை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். கோயிலை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இரவோடு இரவாக வந்த நெடுஞ்சாலை மற்றும் வருவாய் அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த கோயிலின் முன்பகுதியை இடித்து அகற்றினார்கள். காலையில் கோயிலுக்கு பக்தர்கள் வந்தபோது கோயிலின் முன் பகுதி இடிக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சி அளித்தது.
ஜன 12, 2025