Bab al-Mandab ஜலசந்தியை மூடும் ஈரான்-பகீர் பின்னணி Kharg ground attack | Iran war | Hormuz | Houthi
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிர போரில் இறங்கி இருக்கும் நிலையில், ஈரானும் உக்கிரமாக பதிலடி கொடுத்து வருகிறது. பதிலடியின் உச்சமாக சர்வதேச அளவில் 20 சதவீதம் எரிபொருள் சப்ளை செய்யும் முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி விட்டது. கச்சா எண்ணெய், காஸ் இறக்குமதி செய்ய முடியாமல் உலகின் பல நாடுகள் திக்குமுக்காடி விட்டன. சில நாடுகள் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் அமல்படுத்த ஆரம்பித்து விட்டன. இந்தியாவில் இன்னும் நான்கைந்து மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருக்கிறது என்றாலும், போர் தீவிரமானால் என்ன செய்யலாம் என்பது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனையும் நடத்தி வருகிறது. இப்படியொரு இக்கட்டான நேரத்தில் தான் ஹார்முஸ் ஜலசந்தியை போல சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ‛பாப் அல்-மண்டேப் Bab el-Mandeb என்ற இன்னொரு ஜலசந்தியையும் ஈரான் இழுத்து மூடப்பார்க்கிறது. சர்வதேச அளவில் இப்போது பாப் அல் மண்டேப் தலைப்பு செய்தியாக உருவெடுத்து இருக்கும் முழு பின்னணியை பார்க்கலாம்.