உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாயமான 4 சிறார்களை தேடியபோது அதிர்ச்சி | Kids Issue | Chrompet | Chennai

மாயமான 4 சிறார்களை தேடியபோது அதிர்ச்சி | Kids Issue | Chrompet | Chennai

மாயமான 4 சிறார்களை தேடியபோது கண்ட காட்சி ஊரே அதிர்ச்சியில் உறைந்தது... சென்னை, குரோம்பேட்டை லஷ்மிபுரத்தை சேர்ந்த 10 முதல் 13 வயதுடைய சிறார்கள் யுவனேஷ், தேவதர்சன், பூஜா, குஷி ஆகிய 4 பேரும் நேற்று விளையாட சென்றனர். வெகு நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் தேடியும் கிடைக்கவில்லை. போலீசாரும் பல இடங்களில் தேடி வந்த நிலையில், இன்று காலை குரோம்பேட்டை பெரிய ஏரியில் 4 பேரின் உடல்களும் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஊரே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. குழந்தைகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். வீட்டின் அருகே விளையாடிய சிறுவர், சிறுமிகள் ஏரியில் குளிக்க சென்றிருக்கலாம். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். எனினும், இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

அக் 04, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஊர்குருவி
அக் 05, 2026 17:02

குழந்தைகளுக்கு இளம்வயதினிலேயே நீச்சல் கற்றுக்கொடுக்கவேண்டும் .


Bhaskaran
அக் 05, 2026 02:06

மனம் பதைபதைக்கிறது பெற்றோருக்கு எப்படி இருக்கும் இறைவா உனக்கு ஈவு இரக்கம் இல்லையா


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை