உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை மக்கள் கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளுமா? kilambakkam airport metro | RTI | Chennai metro p

சென்னை மக்கள் கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளுமா? kilambakkam airport metro | RTI | Chennai metro p

மெட்ரோ ரயில் திட்டத்தில் அரசுக்கு ஆர்வமில்லை! அம்பலபடுத்திய RTI! சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பரங்கிமலை - சென்னை சென்ட்ரல், விமானநிலையம் - விம்கோநகர் ஆகிய இரண்டு வழித்தடங்களில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக, மாதவரம் டூ சிறுசேரி சிப்காட், மாதவரம் பால்பண்ணை டூ சோழிங்கநல்லூர், பூந்தமல்லி டூ கலங்கரை விளக்கம் ஆகிய 3 வழித்தடங்களில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை வாசிகளின் கோரிக்கையின் பேரில், சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ தொலைவில் மெட்ரோ ரயில் பாதையை அமைக்க அரசு திட்டமிட்டது. இந்தவழித்தடத்தில், பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி நகர், திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 12 நிறுத்தங்கள் அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசு ஒப்புதலுக்காக 2021ம் ஆண்டு நவம்பரிலேயே அனுப்பிவிட்டது. பிறகு திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை 2022ம் ஆண்டு செப்டம்பரில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. திட்ட செலவு 4,625 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டது.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ