உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடகொரிய அதிபரின் தடயங்களை விட்டுவைக்காத உதவியாளர்கள் kim jong un meeting putin| kim staff cleans

வடகொரிய அதிபரின் தடயங்களை விட்டுவைக்காத உதவியாளர்கள் kim jong un meeting putin| kim staff cleans

சீனாவில் 2ம் உலகப்போர் வெற்றி தின ராணுவ பேரணி நடந்தது. இதில் ரஷ்ய அதிபர் புடின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பேரணி முடிந்த பின், அதிபர்கள் புடின், கிம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ரஷ்யாவும், வடகெரியாவும் நட்பு நாடுகள். உக்ரைனுக்கு எதிரான போரில் கூட, வடகெரியா ரஷ்யாவுக்கு ராணுவ உதவுகிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை முடிந்த அதிபர்கள் புறப்பட்டு சென்றனர். அப்போது, அதிபர் கிம் ஜாங் உன் உட்கார்ந்து இருந்த இருக்கையை அவரது உதவியாளர் சுத்தமாக துடைத்தார். இருக்கை மட்டுமல்ல, அவர் எந்தெந்த பொருட்களை தொட்டாரோ, எங்கெல்லாம் அவர் உடல் பட்டதோ அத்தனை இடங்களையும் தடயம் இல்லாமல் உதவியாளர் துடைத்தார். கிம் தண்ணீர் குடித்த கிளாசை பெண் உதவியாளர் எடுத்து சென்றார். இந்த வீடியோ பேசுபொருள் ஆனது. கிம்மின் டிஎன்ஏ திருடப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இப்படி செய்திருப்பதாக தெரிகிறது. உடலில் இருந்து விழும் முடி, வியர்வை ஆகியவற்றில் இருந்து ஒருவரின் டிஎன்ஏவை கண்டுபிடிக்க முடியும். அதன் மூலம், அவரது உடல்நலம் பாதிப்புகளையும் அறிந்து கொள்ள முடியும். அதை தடுப்பற்காகவே இப்படி செய்து இருக்கிறார்கள். கிம் ஜாங் உன் மட்டுமல்ல, ரஷ்ய அதிபர் புடினும் இதுபோல் செய்துள்ளார். சமீபத்தில் அதிபரை டிரம்பை சந்திக்க புடின் அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு சென்று இருந்தார். அப்போது, அவரது சிறுநீர், மலத்தை அவரது காவலாளிகள் ரஷ்யாவுக்கு கொண்டு சென்றனர். புடினின் உடல்நலம் குறித்த ரகசியங்கள் யாருக்கும் தெரியகூடாது என்பதற்காக இப்படி செய்தனர். #KimJongUn #Putin #NorthKorea #Russia #Diplomacy #InternationalRelations #MeetingHighlights #CleaningProtocol #SecurityMeasures #TrustAndSafety #PoliticalStrategy #WorldLeaders #ViralVideo

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ