உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெடித்தது பாக் அணு ஆயுத கிடங்கு? பகீர் ரிப்போர்ட் india vs pakistan | kirana hills nuclear storage

வெடித்தது பாக் அணு ஆயுத கிடங்கு? பகீர் ரிப்போர்ட் india vs pakistan | kirana hills nuclear storage

பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்தியா மிகப்பெரிய சம்பவத்தை செய்திருக்க கூடும் என்ற அச்சம் உலக நாடுகள் இடையே தொற்றி இருக்கிறது. குறிப்பாக மொத்த பாகிஸ்தானும் உச்சக்கட்ட பீதியில் உறைந்து இருக்கிறது. அதாவது, பாகிஸ்தான் அணு ஆயுத சேமிப்பு கிடங்கை குறி வைத்து இந்தியா தாக்கியதாக முதலில் இருந்தே ஒரு தகவல் பரவி வருகிறது. இந்தியா இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், இப்போது அமெரிக்க அரசாங்கம் அணு ஆராய்ச்சியாளர்கள் குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்து இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம். இந்தியாவை போல் பாகிஸ்தானிடமும் சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இவற்றின் பெரும் பகுதியை கிரானா மலையில் பாகிஸ்தான் பதுக்கி வைத்திருப்பதாக சர்வதேச நிபுணர்கள் சொல்கின்றனர். இந்த இடம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சர்கோடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலையின் நிறத்தை வைத்து இதை கருப்பு மலை என்றும் அழைக்கின்றனர். இந்த மலைப்பகுதி முழுக்க முழுக்க பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சர்கோடா விமான படை தளத்தில் இருந்து வெறும் 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. குஷாப் அணு உற்பத்தி மையத்தில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 68 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 39 கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்ட இந்த மலைக்குள் பிரமாண்டமான 10 சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வலுவான சிமென்ட் கான்கிரீட் போடப்பட்டு இருக்கும் இந்த சுரங்கங்களில் தான் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அத்தனையும் வைக்கப்பட்டுள்ளன. மலையில் அணு உற்பத்தி தொடர்பான பல கூடங்களும் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் சர்கோடா விமான படை தளம், குஷாப் அணு உற்பத்தி மையத்துடன் இணைக்கும் ரகசிய பாதை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இங்கு ராடார் மையம், ஏவுகணை தடுப்பு சிஸ்டங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. பல அடுக்கும் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அப்பாவி மக்களை குறி வைத்ததால் இந்தியா திருப்பி அடித்தது. பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், விமானப்படை தளங்களை குண்டு வீசி தகர்த்தது. இந்தியாவின் தாக்குதலில் 11 இடங்கள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தன. கிரானா மலைக்கு பக்கத்தில் உள்ள சர்கோடா விமான படை தளமும் பலத்த சேதத்தை சந்தித்தது. இந்த லிஸ்ட்டில் வராத இடம் கிரானா மலை தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை குறி வைத்து இந்தியா தாக்கியதாக பலரும் பேச ஆரம்பித்தனர். கிரான மலையில் இந்தியா குண்டு வீசுவது போன்ற வீடியோக்களும் வெளியே வந்தன. இது பற்றி ரிப்போர்ட்டரின் கேள்விக்கு நம் ஏர் மார்ஷல் பாரதி மறுப்பு தெரிவித்தார். ‛நீங்கள் சொல்லி தான் கிரானா மலையில் அணு ஆயுதங்கள் இருப்பதே தெரியும். தகவலுக்கு நன்றி என்று சொல்லி விட்டு சிரித்தார். பின்னர் கிரானா மலையை நாங்கள் தாக்கவில்லை என்று மறுப்பும் தெரிவித்தார். இருப்பினும் அவரது சிரிப்புக்கு பல விதமான அர்த்தங்களை நெட்டிசன்கள் கற்பித்து வருகின்றனர். கிரானா மலையை இந்தியா தாக்கியது உண்மை என்பதை காட்டுவது போல் தார் ஏர் மார்ஷல் சிரிப்பு இருப்பதாக பலரும் சுட்டிக்காட்ட ஆரம்பித்தனர். இந்த நிலையில் தான் இன்னொரு சம்பவமும் இப்போது நடந்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, இந்தியா கிரானா மலையில் நடத்திய குண்டு வீச்சில், பாகிஸ்தான் அணு ஆயுத கிடங்கில் கசிவு ஏற்பட்டு இருக்கிறதாம். இந்த அணு கதிர்வீச்சு கசிவை ஆராய்ச்சி மூலம் உறுதி செய்து நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த அணு ஆராய்ச்சியாளர்களை டிரம்ப் அரசாங்கம் அனுப்பி வைத்து இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய கேள்விக்கு அமெரிக்கா எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதனால் பாகிஸ்தானின் ஆயுத கிடங்கில் இந்தியா கை வைத்தது உறுதியாகி விட்டது என்று இந்திய நெட்டிசன்கள் பலரும் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இருப்பினும் இந்தியா ஏற்கனவே இதை மறுத்து விட்டது. பாகிஸ்தானோ இது பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ