லாட்ஜில் நடந்தது என்ன? கொடைக்கானலில் பரபரப்பு Kodaikanal | BBQ | Tourist |
திருச்சியை சேர்ந்த சகோதரர்களான சிவசங்கர் மற்றும் சிவராஜ் தங்களது நண்பர்களான ஆனந்த பாபு, ஜெயகண்ணன் ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். நாயுடுபுரம் அருகே உள்ள சின்னபள்ளம் பகுதியில் உள்ள லாட்ஜில் இரண்டு ரூம் எடுத்து தங்கினர். கொடைக்கானலில் உள்ள மதுபான கடையில் மதுபானம், பார்பி Q செய்ய சிக்கன் மற்றும் மசாலா பொருட்கள் வாங்கினர். பிறகு, அடுப்பு கரி, மற்றும் அடுப்பு ஆகியவற்றை தங்கும் அறைக்கு எடுத்து சென்றனர். நேற்று நண்பகல் முதல் இரவு வரை விடாமல் மழை பெய்தது. இதனால் அறையிலேயே சமைத்து சாப்பிட முடிவு செய்தனர்.
ஆக 10, 2024