/ தினமலர் டிவி
/ பொது
/ கேரளாவை ஒட்டிய பகுதி; மலை கிராம மக்கள் அச்சம்! | Kodaikanal | Kodaikanal Land split
கேரளாவை ஒட்டிய பகுதி; மலை கிராம மக்கள் அச்சம்! | Kodaikanal | Kodaikanal Land split
கொடைக்கானலை சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளது. மேல் மலைகளில் உள்ள கிராமத்தில் கடைக்கோடி கிராமம் தான் கிளாவரை. கிளாவரை கிராமத்தின் ஒரு பகுதி கீழ் கிளாவரை. இங்குள்ள மக்களுக்கு செருப்பன் ஓடையில் இருந்து குழாய் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களாக நீர் வரவில்லை. சந்தேகமடைந்த கிராம மக்கள் குழாய் வரும் பாதையை ஆய்வு செய்தனர். கூனி பட்டி என்ற வனப்பகுதியில் 300 அடி நீளத்திற்கு பெரிய பிளவு நிலத்தில் ஏற்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
செப் 21, 2024