உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோடை சீசனுக்கு செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் | Kodaikkanal | ooty | Dinamalar News

கோடை சீசனுக்கு செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் | Kodaikkanal | ooty | Dinamalar News

மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானலுக்கு, சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் டூரிஸ்ட்கள் அதிகளவில் வருவார்கள். இந்த சமயங்களில் மலைப்பாதைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு டூரிஸ்ட்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமான வாகனங்களால் சுற்றுச்சூழலும் பதிக்கப்படுகிறது. டூரிஸ்ட் வாகனங்களை கட்டுப்படுத்த ஐகோர்ட் உத்தரவின்படி கடந்த ஆண்டு முதல் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இ-பாஸ் முறை தொடர ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் டூரிஸ்ட் வாகனங்களை கட்டுப்படுத்த சில திருத்தங்களையும் ஐகோர்ட் அறிவித்துள்ளது. நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. நீலகிரியில் வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். வார இறுதி நாட்களில் 8000 வாகனங்கள் அனுமதிக்கப்படும். கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்கள், மருத்துவ சேவை, அரசு பஸ்களுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. வாகன கட்டுப்பாடுகள் ஜூன் 30 வரை அமலில் இருக்கும்.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை