ஜெ. மாஜி வளர்ப்பு மகனிடம் ஒன்றரை மணிநேரம் CBCID விசாரணை | Kodanad Murder Case | Sudhakaran | cbcid
கொடநாடு கொலை வழக்கில் உங்களுக்கு பங்கு இருக்கா சார்? எதிர்பாராத கேள்வியால் அதிர்ச்சியில் சுதாகரன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ல் இறந்த பிறகு அவருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் எஸ்டேட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் 2017 ஏப்ரல் 23ம்தேதி நடந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேரளாவை சேர்ந்த மனோஜ், சயான், சதீசன், சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி உள்பட 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிவசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு விசாரணை வேகமெடுத்தது. இதுவரை 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி சிறப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஜெயலலிதா மற்றும் எடப்பாடி ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஏ.எஸ்.பி. வீரபெருமாளிடம் கடந்த சில நாட்களுக்கு முன் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும், சசிகலாவின் உறவினருமான சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். இன்று காலை 10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் ஒன்றேகால் மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 40 கேள்விகள் கேட்கப்பட்டன. சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு மாதவன் கூடுதல் சூப்பிர்ண்டு முருகவேல், துணை சூப்பிரண்டு சந்திரசேகர் அடங்கிய விசாரணைக்குழுவினர் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் உண்மைகளை சொன்னேன் என்றார். கொடநாடு கொலை வழக்கில் உங்களுக்கு பங்கு இருக்கா என ஒரு நிருபர் கேட்டதும் ஷாக் ஆனார்.