உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொல்கத்தா சம்பவத்தில் அடுத்த பூகம்பம் kolkata woman doctor case | BJP MP Abhijit | Abhijit go back

கொல்கத்தா சம்பவத்தில் அடுத்த பூகம்பம் kolkata woman doctor case | BJP MP Abhijit | Abhijit go back

கொல்கத்தா கொடூரத்தில் ட்விஸ்ட் கமிஷனருக்கு பெரிய சிக்கல்! எவிடன்ஸ் அழிந்தது எப்படி? கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான். இந்த கொடூர சம்பவம் பற்றி சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடந்து 25 நாட்கள் ஆகியும் கொல்கத்தாவில் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. கொல்கத்தா லால்பஜாரில் ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களிடம் போலீஸ் கமிஷனர் பேச வேண்டும்; சம்பவத்துக்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும்; பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை இடத்தை காலி செய்ய மாட்டோம் என்று திட்டவட்டமாக சொல்லி விட்டனர். இந்த நிலையில் ஜூனியர் டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாஜ எம்பி அபிஜித் கங்கோபாத்யாய் போராட்டம் நடந்த இடத்துக்கு வந்தார். ஆனால் அவரை போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை. கோ பேக் அபிஜித் என்று தொடர்ந்து கோஷம் போட்டனர். இதனால் பாஜ எம்பி திகைத்துப்போனார்.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ