பெண் டாக்டர் சம்பவத்தில் இதுவரை கசியாத பகீர் தகவல் | kolkata woman doctor case | Sanjay Roy | CBI
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த 31 வயதான பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர காரியத்தை செய்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டான். அவன் கொல்கத்தா போலீஸ் டிப்பார்ட்மென்ட்டில் தன்னார்வலராக வேலை பார்த்தவன். போலீஸ் போலவே நடந்து கொள்வான். போலீஸ் டிசர்ட் தான் அணிவான். பைக்கிலும் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தான். போலீஸ் முகாமில் தான் தூங்குவான். அடிக்கடி ஆர்ஜி கர் மருத்துவமனையில் அவனுக்கு பணி ஒதுக்கப்பட்டது. அங்கு எல்லா இடமும் அவனுக்கு அத்துப்படி. முதலில் கொல்கத்தா போலீஸ் தான் இந்த வழக்கை கவனித்தது. சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டதும் அவர்களால் தான்.