பெண் டாக்டர் சம்பவத்தில் உண்மை இதுதான் | kolkata woman doctor case | kolkata case fact | CBI
பெண் டாக்டர் சம்பவத்தில் முடிவு அடித்து சொன்ன குற்றப்பத்திரிகை! கொடூரன் இவன் தான் கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்த கொடூர காரியத்தை செய்ததாக சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான். சம்பவத்தில் பல மர்மங்கள் இருந்ததால் வழக்கு கொல்கத்தா போலீசிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணை நடத்திய சிபிஐ சஞ்சய் ராய் ஒற்றை ஆளாக இந்த கொடூர சம்பவத்தை செய்தான் என்பதை உறுதி செய்தது. சம்பவத்தன்று இரவு செமினார் ஹாலில் பெண் டாக்டர் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். அதிகாலை 4 மணி அளவில் செமினார் ஹால் பகுதிக்கு சஞ்சய் ராய் செல்வதும், 40 நிமிடம் கழித்து வெளியே வருவதும் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அவனை தவிர சம்பவ நேரத்தில் வேறு யாரும் அங்கு செல்லவில்லை. அந்த நேரத்தில் தான் டாக்டர் மரணம் நேர்ந்து இருந்தது. அதாவது அதிகாலை 3-6 மணிக்குள் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சுட்டிக்காட்டியது. அதே போல் பெண் டாக்டர் சடலம் அருகே ப்ளூடூத் ஹெட்செட் கிடந்தது. அது சஞ்சய் ராய்க்கு சொந்தமானது. அவன் செமினார் ஹால் பகுதியில் நுழையும் போது அவன் கழுத்தில் ஹெட்செட் தொங்கியது. திரும்பி வரும் போது இல்லை. இதுவும் முக்கிய ஆதாரமானது. எல்லாவற்றுக்கும் மேலாக முக்கிய டிஎன்ஏ ஆதாரம் கிடைத்தது. சம்பவத்தின் போது சஞ்சய் ராயுடன் பெண் டாக்டர் கடுமையாக போராடி இருக்கிறார். சம்பவத்தின் போது சஞ்சய் ராய் உடலை பெண் டாக்டரின் நகம் கீறியது. அவரது நக இடுக்கில் அவனது ரத்தம் மற்றும் தோல் இருந்தது. அதில் இருந்த சாம்பிளின் டிஎன்ஏவையும் சஞ்சய் ராய் ரத்தத்தில் இருந்து எடுத்த டிஎன்ஏவையும் தடய அறிவியல் நிபுணர்கள் ஒப்பிட்டு பார்த்தனர். இரண்டும் ஒன்று என்பது தெரிந்தது. சஞ்சய் ராய் தான் இந்த கொடூரத்தை செய்திருக்க வேண்டும் என்பதை உறுதியாக்கும் மிக முக்கியமான எவிடன்ஸ் இது.