பெண் டாக்டர் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் பகீர் | kolkata woman doctor death | Sanjai Rai | Autopsy
கொல்கத்தாவில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் மருத்துவமனையில் 31 வயதான பெண் டாக்டரை அரக்கன் சஞ்சய் ராய் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் மொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சஞ்சய் ராயிடம் போலீஸ் கஸ்டடியில் விசாரணை நடக்கிறது. 18ம் தேதிக்குள் முழு விசாரணையையும் முடித்து விட வேண்டும் என்று போலீசாருக்கு அம்மாநில முதல்வர் மம்தா கெடு விதித்துள்ளார். வெள்ளிக்கிழமை காலையில் ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையின் 3வது மாடியில் உள்ள செமினார் ஹாலில் கொடூர காயங்களுடன் பெண் டாக்டர் சடலமாக மீட்கப்பட்டார். முதல் கட்ட பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதியானது. பெண் டாக்டரை கொலை செய்து விட்டு பின்னர் அந்த அரக்கன் பலாத்காரம் செய்திருக்கக்கூடும் என்று முதலில் போலீசார் சந்தேகித்தனர்.