உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடலில் வீணாக கலக்கும் நீர்: கலங்கும் விவசாயிகள் | Kollidam river | Excess water | Mixed in Sea

கடலில் வீணாக கலக்கும் நீர்: கலங்கும் விவசாயிகள் | Kollidam river | Excess water | Mixed in Sea

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி, உபரி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் நீர் திறக்கப்பட்டது. காவிரி மற்றும் கிளை நதிகளில் திறந்து விடப்பட்ட நீர் போக, வினாடிக்கு 81 ஆயிரம் கன அடி நீர் கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது. வடவாறு, வடக்கு ராஜன், தெற்கு ராஜன், கும்கி மண்ணியாறு பாசனத்துக்கு போக மீதமுள்ள நீர் மயிலாடுதுறை மாவட்டம் பழையார் அருகே கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதுடன் நிலத்தடி நீர் மேம்படும். இது நல்ல விஷயம்தான்.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை