உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Koo சமூக வலைதள சேவை நிறுத்தம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு | India Twitter KOO | KOO is shutting down

Koo சமூக வலைதள சேவை நிறுத்தம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு | India Twitter KOO | KOO is shutting down

டுவிட்டருடன் போட்டி போட வந்த Koo சேவையை நிறுத்த என்ன காரணம்? மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான கூ சமூகவலைத்தளம் 2019ல் தொடங்கப்பட்டது. பெங்களூருவை தலைமை இடமாகக்கொண்டு, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சேவை வழங்கி வந்தது. இந்தியாவில் டுவிட்டர் தளத்துக்கு மாற்றாக கூ சமூகவலைத்தளம் பார்க்கப்பட்டது. 2021ல் ட்விட்டர் நிறுவனத்துடன் மத்திய அரசுக்கு பிரச்னை ஏற்பட்ட சமயத்தில் பல மத்தியஅமைச்சர்களும், மத்திய அரசின் பல துறைகளும் கூ வலைதளத்தை பயன்படுத்தின. இந்தியாவில் உருவான கூ தளத்துக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்தது. அதன் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளில் 6 கோடி முறை கூ வலைதளம் டவுன்லோடு செய்யப்பட்டு பெரும் வளர்ச்சியை கண்டது. கூ தளம் புகழின் உச்சத்தில் இருந்த 2022ம் ஆண்டில் 1 கோடி மாதாந்திர ஆக்டிவ் யூசர்களும் 9000 விஐபி யூசர்களும் இருந்தனர். இருப்பினும் நாளடைவில், நிதி நெருக்கடி, நிறுவனத்தின் சந்தை நிலவரம், தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான பராமரிப்பு செலவு, பார்ட்னர்ஷிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு உள்ளிட்ட காரணங்களினால் கூ நிறுவனத்தின் செயல்பாடு ஸ்தம்பித்து வந்தது.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை