ஆண்களும், பெண்களும் பாரம்பரிய நடனமாடி உற்சாகம்! Kota Tribe Festival | Nilgiris | Aiyanoor Ammanoor
நீலகிரி மாவட்டத்தில், கோத்தர் பழங்குடி மக்கள் கொல்லிமலை, கோத்தகிரி, திருச்சிக்கடி உள்ளிட்ட 7 கிராமங்களில் வசிக்கின்றனர். குன்னூர் அருகே உள்ள கொல்லிமலையில் கோத்தரின மக்களின் அய்னோர், அம்னோர் எனும் மூர்கம்பட்டராயர் திருவிழா ஆண்டுதோறும் நடக்கும். இந்த ஆண்டு திருவிழா பாரம்பரிய முறைப்படி துவங்கியது. முதலாவதாக கோயில்களில், விரதம் இருந்த கோத்தரின ஆண்கள் பூஜை செய்து வழிபட்டனர். வெருகுரி சாஸ்திரம் எனப்படும் விழாவில், தினை, அவரை, உப்பு கொண்டு, ஆண்களால் பொங்கல் வைக்கப்பட்டது. அதை கோயிலில் வைத்து வழிபட்டு, குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கினர். தொடர்ந்து கோயிலில் தங்கி இரவில் குண்டம் வளர்த்து ஆண்களும், பெண்களும் பாரம்பரிய நடனமாடினர். தொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த மக்கள், ஆடல் பாடலுடன் திருவிழாவை கொண்டாடினர். படுகர் மற்றும் பிற சமூக மக்கள் பாரம்பரிய இசையுடன் வரவேற்றனர். விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், தானியங்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. குலதெய்வத்தை வரவேற்கும் வகையில், பாரம்பரிய உடை அணிந்து, பெண்கள் நடனமாடினர். ஆண், பெண் இருவரும் சமம் என்பதை வலியுறுத்தும், அட்டாஸ் குப்பாஸ் எனப்படும் பாரம்பரிய நடனத்தில், வண்ண உடை மற்றும் அணிகலன்கள் அணிந்த ஆண்கள் நடனமாடினர். மகளிரின் பாடல்கள் உட்பட கலாசார நிகழ்ச்சிகளுடன் விழா நாளை நிறைவு பெறுகிறது. #KotaTribeFestival #Nilgiris #AiyanoorAmmanoor #CulturalCelebration #TribalTraditions #FestivalVibes #NilgirisHeritage #KotaTribe #IndianFestivals #EcoTourism #CommunityGathering #UniqueCulture #MountainFestivals #LocalArt #NatureCulture #TamilNadu #CulinaryTraditions #ExploreNilgiris #TravelDiaries