/ தினமலர் டிவி
/ பொது
/ சிலிண்டர் வெடித்து வடமாநில தொழிலாளர் வீடுகள் சேதம் | kovai blast | fire Accident | Coimbatore cylind
சிலிண்டர் வெடித்து வடமாநில தொழிலாளர் வீடுகள் சேதம் | kovai blast | fire Accident | Coimbatore cylind
கோவை ஆவாரம்பாளையம் நவஇந்தியா அருகே அபார்ட்மெண்ட் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிக்காக தகர செட் அமைத்து 200க்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இன்று அவர்கள் பணிக்கு சென்ற நிலையில் பிற்பகல் நேரம் திடீரெனெ சிலிண்டர் வெடித்து தீ பற்றியது. தொடர்ந்து வெடிப்பு சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். 20 சிலிண்டர்கள் வரை அடுத்தடுத்து வெடித்து 40க்கும் அதிகமான தகர வீடுகள் சேதமடைந்தன.
ஆக 29, 2026