கோவை பெண்கள் அச்சம்: பாதுகாப்பு கேள்விக்குறி | Kovai collector office | women lawyers | harassment
பெண் வக்கீல்களிடம் சில்மிஷம் கோவையில் மீண்டும் ஒரு சம்பவம் போலீசுடன் வாக்குவாதம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நுகர்வோர் கோர்ட்டுக்கு 2 பெண் வழக்கறிஞர்கள் ஸ்டேட் பேங்க் சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்த மதுபோதை ஆசாமி பெண் வழக்கறிஞர்களிடம் அத்துமீற முயன்றான். ஆபாச வார்த்தைகளை பேசியுள்ளான். பெண் வழக்கறிஞர்களை தொட்டு சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. வேகமாக நடந்த சென்ற வழக்கறிஞர்கள், கலெக்டர் அலுவலகம் முன் பணியில் இருந்த போலீசாரிடம் புகார் கூறினர். பின் தொடர்ந்து வந்த ஆசாமியை போலீசார் மடக்கி பிடித்தனர். இதை வீடியோ எடுத்த வீடியோ கேமராமேன்களை போலீசார் தடுத்தனர். கையை பிடிச்சி இழுக்கும்போது எங்க போனீங்க என போலீசார் கேட்க; கையை பிடிச்சி இழுத்தபோது நீங்க என்ன செஞ்சீங்க? என பத்திரிகையாளர் பதிலுக்கு சொல்ல பரபரப்பு நிலவியது.