வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தி.மு.க. மீது பழி சுமத்தும் நோக்கத்தில் அண்ணாமலையே ஆட்களை தயார் செய்து இருக்க கூடும் என்று கோவை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
மாணவிக்கு நேர்ந்த கொடூரம்: ஸ்டாலினை கிழித்த அண்ணாமலை kovai college girl case| crime |Annamalai
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நண்பரை அடித்து விரட்டி விட்டு மாணவியை திமுக பிரமுகர் ஞானசேகரன் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தில் திமுக அரசின் தவறுகளை பட்டியலிட்டு கிழித்தவர் அண்ணாமலை. குற்றம் நடந்த பிறகு போலீஸ் அதிகாரிக்கும் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்துக்கும் ஞானசேகரன் போன் செய்தது எதற்காக? யாரை காப்பாற்ற துடிக்கிறது இந்த திமுக அரசு? என்பது போன்ற அண்ணாமலை கேட்ட பல கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என மக்கள் பேசிக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், கோவையை உலுக்கிய கல்லூரி மாணவி பலாத்கார சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவி, 3 சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
தி.மு.க. மீது பழி சுமத்தும் நோக்கத்தில் அண்ணாமலையே ஆட்களை தயார் செய்து இருக்க கூடும் என்று கோவை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.