கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: திடுக் பின்னணி | kovai girl case | coimbatore girl case
கோவையை உலுக்கிய சிறுமி சம்பவம் 7 மாணவர்கள் கூட்டாக செய்த கொடூரம் தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக அடுத்தடுத்து நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் உச்சமாக அரங்கேறிய கோவை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப்போட்டுள்ளது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி கோவை மாநகரை சேர்ந்தவர். சோசியல் மீடியா மூலம் அவரிடம் சில கல்லூரி மாணவர்கள் நட்பாக பழகினர். குனியமுத்தூரில் தாங்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கு மாணவியை அழைத்தனர். நண்பர்கள் தானே என்று நம்பி அவரும் சென்றிருக்கிறார். ஞாயிறு மாலையில் வீட்டை விட்டு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. இரவு தாமதமாகியும் பிள்ளை வீட்டுக்கு வராததால் சிறுமியின் பாட்டி உக்கடம் போலீசில் புகார் செய்தார். இரவு முழுதும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. செல்போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. மறுநாள் சிறுமி வீட்டுக்கு வந்தாள். அவளிடம் விசாரித்த போது தான், தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி கதறினாள். 7 கல்லூரி மாணவர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொன்னாள். அதன் பேரில் 7 கல்லூரி மாணவர்களையும் கைது செய்தோம். அவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 பேரும் வெவ்வேறு கல்லூரிகளில் படிப்பவர்கள். ஆனால் நண்பர்கள். இந்த சம்பவம் பற்றி முழுமையாக விசாரித்து வருகிறோம் என்று போலீசார் கூறினர்.