போதை விற்ற காசில் வாங்கிய சொத்துகளுக்குபோலீசார் வேட்டு
கோவையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் ஆபரேஷனில் இறங்கினர். ஆர்எஸ்புரம், பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் அவர்களின் கூட்டாளிகளை போலீசார் பிடித்தனர். மணிகண்டன், விநாயகம், கிருஷ்ணகாந்த், ஆதர்ஸ், ரிதேஷ், ரோகன், மகாவிஷ்ணு ஆகிய 7 பேர் சிக்கினர். இவர்கள் 24 முதல் 41 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில், மகாவிஷ்ணு என்பவர், கோவை மாவட்ட பொருளாதர குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகன்.
மார் 28, 2025