கோவை தொழில்துறை மாநாட்டில் ம.பி. முதல்வர் மோகன் யாதவ் அறிவிப்பு
கோவை நீலாம்பூரில் மத்திய பிரதேசத்தில் தொழில் வாய்ப்புகள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக தொழில்துறையினரை மத்தியபிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு முதல்வர் யாதவ் அழைப்பு விடுத்தார். மத்தியப்பிரதேசத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள், தொழில்துறைக்கு வழங்கப்படும் மானியம், சலுகைககள் குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டது. இதில் கோவை, திருப்பூரை சேர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.
ஜூலை 25, 2024