உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பலகார கடைகளில் உணவு துறை ஆய்வு

பலகார கடைகளில் உணவு துறை ஆய்வு

தீபாவளியையொட்டி கோவையில், ஸ்வீட், காரம் உள்ளிட்ட பலகார கடைகளில் விற்பனை அள்ளுகிறது. தீபாவளிக்கென புதிதாக ஸ்வீட் கடைகளும் ஏராளமாக முளைத்து உள்ளன. இந்த கடைகளில் விற்கப்படும் திண்பண்டங்கள் தரமானதாக இருக்கிறது என்பதை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். கோவை நகரம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பெரிய நாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், ஆனைமலை வால்பாறை, சரவணம்பட்டி, உட்பட பல இடங்களில் ஸ்வீட் உட்பட திண்பண்டங்கள் விற்கும் கடைகளில் ஆய்வு நடந்தது. கடந்த 10 நாட்களில் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், கடைகள் என 436 இடங்களில் உணவின் தரம் பரிசோதிக்கப்பட்டது.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை