உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாயுமா உடந்தை? கிருஷ்ணகிரியில் பகீர் சம்பவம் | Krishnagiri | Krishnagiri Marriage

தாயுமா உடந்தை? கிருஷ்ணகிரியில் பகீர் சம்பவம் | Krishnagiri | Krishnagiri Marriage

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திம்மத்தூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அங்குள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பிறகு பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை. திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். சிறுமிக்கும், காளிக்குட்டை மலை கிராமத்தை சேர்ந்த 29 வயதான மாதேஷ் என்பவருக்கும் பிப்ரவரி 3 ஆம் தேதி பெங்களூருவில் கட்டாய திருமணம் நடந்தது. சிறுமியின் தாய் நாகம்மா திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்த சிறுமி கணவன் மாதேஷ் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் ஆகியோர் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுகட்டாக தூக்கி சென்றுள்ளனர். மாதேஷ் குடும்பத்தார் சிறுமியை தூக்கி செல்லும் காட்சியை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ