/ தினமலர் டிவி
/ பொது
/ தேன்கனிக்கோட்டை அருகே நடந்த விபரீத சம்பவம் | 2 Girl Childs Dead | Krishnagiri
தேன்கனிக்கோட்டை அருகே நடந்த விபரீத சம்பவம் | 2 Girl Childs Dead | Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கோபசந்திரம் கிராமத்தில் ரவிகுமார் என்பவர் கோழி பண்ணை வைத்துள்ளார். இங்கு பீகாரை சேர்ந்த 30 வயது முகமது ஜகாவத் குடும்பத்துடன் தங்கி வேலை செய்கிறார். இன்று வழக்கம் போல் கணவன் - மனைவி இருவரும் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பெண் குழந்தைகள் சார்பானு வயது 4, ஆயத்காத்தூன் வயது 3 இருவரையும் பண்ணை அருகே உள்ள தீவன அறையில் செல்போனை கொடுத்து விளையாட விட்டிருந்தனர். அப்போது திடீரென தீவன மூட்டைகள் சரிந்து குழந்தைகள் மீது சரிந்தது. மூட்டைகளுக்கிடையே சிக்கிய 2 குழந்தைகளும் மூச்சு திணறி கிடந்தனர்.
அக் 25, 2024