குளித்தலை அரசு ஆஸ்பிடலில் அதிகாலையில் அதிர்ச்சி | Kulithalai Hospital | Karur
குளித்தலை ஆஸ்பிடலுக்குள் கொடூரம் சிகிச்சை பெற்று வந்த பெண் கொலை கரூர், குளித்தலை அடுத்துள்ள பட்டவர்த்தியை சேர்ந்தவர் விஷ்ரூத். ஆக்டிங் டிரைவர். இவரது மனைவி ஸ்ருதி, வயது 27. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் உண்டானது. ஆத்திரமடைந்த விஷ்ரூத், ஸ்ருதியை கடுமையாக தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த ஸ்ருதி குளித்தலை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது. மயக்கநிலையில் இருந்தார். அதிகாலை ஸ்ருதி அறைக்குள் நுழைந்த விஷ்ரூத் அவரை கத்தியால் குத்தினார். வயிற்றில் மூன்று இடங்களில் ஆழமான காயம் ஏற்பட்டு ஸ்ருதி ரத்தவெள்ளத்தில் சரிந்தார். இதை கண்டு சக நோயாளிகள் அலறினர்.