/ தினமலர் டிவி
/ பொது
/ மகா கும்பமேளாவில் குறையாத பக்தர்கள் கூட்டம் Pryagraj Kumbh mela| Uttar Pradesh| Maha Kumbh| Yogi Ad
மகா கும்பமேளாவில் குறையாத பக்தர்கள் கூட்டம் Pryagraj Kumbh mela| Uttar Pradesh| Maha Kumbh| Yogi Ad
பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13ம் தேதி மகா கும்பமேளா திருவிழா துவங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடத்தப்பட்டாலும், கிரகங்களின் இருப்பு நிலவரத்தின் அடிப்படையில் இம்முறை நடக்கும் மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் விசேஷ கும்பமேளாவாக கருதப்படுகிறது. ஜனவரி 13, 14,29ம் தேதி மற்றும் பிப்ரவரி 3 மற்றும் 12 ஆகிய நாட்களில் சாஹி ஸ்நான் எனப்படும் விஷேச புனித நீராடல் நடந்தது. அதில், காேடிக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளை வழிபட்டனர். ஜனாதிபதி, பிரதமர், உபி உள்ளிட்ட பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
பிப் 15, 2025